தீ விபத்தில் தொழிலாளி உடல் கருகி சாவு

கடந்த 9 மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சரவணனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.தேன்மொழி அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்தில் தொழிலாளி உடல் கருகி சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஜீவா நகரைச் சேர்ந்தவர் சரவணன் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (43). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 9 மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சரவணனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ப்பட்டு பிளேட் வைக்கப்ப ட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டின் அருகில் உள்ள காலியிடத்தில் கிடக்கும் மரத்துண்டுகள், குப்பை களை தீ வைத்து அகற்றிட வேண்டும் என தன் மனைவி யிடம் சரவணன் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் மனைவி தேன்மொழி வெளியில் சென்றிருந்தார். அப்போது அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர் போன் மூலமாக தேன்மொழியைத் தொடர்பு கொண்டு உங்கள் வீடு தீப்பற்றி எரிவதாக கூறி யுள்ளார்.

இதையடுத்து, தேன்மொழி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது தன் வீட்டின் அருகில் இருந்த மரங்கள், செடி, கொடிகள், குப்பைகள் தீயில் எரிந்து கொண்டி ருந்துள்ளன.

அதன் அருகில் சரவணன் உடலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தேன்மொழி அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com