வேன் மோதி பெண் சாவு

சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
வேன் மோதி பெண் சாவு
Published on

சென்னிமலை:

சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு டி.எம்.எம்.புரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஈங்கூர் ரோட்டில் உள்ள மாரியப்பா நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெருந்துறை சிப்காட்டில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் சரஸ்வதி மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சரஸ்வதி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com