காளிங்கராயன் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை

கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.இதனால் வேதனை அடைந்த பாசமலர் காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.
காளிங்கராயன் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் அந்த பெண் குறித்து அடையாளம் தெரியவந்தது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆர்.என்.புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி பாசமலர் (48) என தெரிய வந்தது.

திருநாவுக்கரசுக்கும் பாசமலருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருநாவுக்கரசு கட்டிட வேலை செய்து வருகிறார். பாசமலரும் கூலி வேலை செய்து வந்தார். கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

இதனால் வேதனை அடைந்த பாசமலர் நேற்று ஆர். என்.புதூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தார்.

சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார். அவரது உடல் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகரில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலில் மிதந்து வந்த போது போலீசார்மிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com