விஷம் குடித்து பெண் தற்கொலை

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிறுவலூர் புது காலனி எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விமலா தேவி (33). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் விமலா தேவிக்கு தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு இடங்களில் மருத்துவ சிகிச்சை பார்த்துள்ளனர்.

மருத்து செலவுக்காக தங்கவேல் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமலாதேவி தனக்கு உடல்நிலை சரி இல்லை என்றும், இதற்காக கடன் சுமை அதிகரித்தது என்றும் மன வேதனையில் இருந்து உள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தங்கவேல் தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விமலா தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com