காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

செல்வனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இதையடுத்து அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, கருக்கன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (55). இவரது மனைவி புஷ்பா (40). இவர்கள் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

செல்வனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

உடனடியாக அவரை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த போது கடந்த மாதம் 25-ந் தேதி எலி பேஸ்ட்டை (விஷம்) தின்று விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து செல்வன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com