அரசு அலுவலகத்தில் லேப்-டாப், கேமிரா திருட்டு

துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப், ஒரு கேமிராவை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். சூரம்பட்டி போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அரசு அலுவலகத்தில் லேப்-டாப், கேமிரா திருட்டு
Published on

ஈரோடு:

ஈரோடு பெருந்துறை சாலையில் கலெக்டர் அலு வலகம் அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு தமிழக அரசின் விதை சான்று மட்டும் அங்கக சான்று விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப், ஒரு கேமிராவை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.

பின்னர் தனி நபரின் அலுவலகத்தில் புகுந்து ஒரு லேப்டாப் மற்றும் பணம் ரூ.9000 மர்ம நபர்கள் திருடி உள்ளனர். அருகில் இருந்த பைனான்ஸ் நிறுவனத்தில் திருட முயற்சித்துள்ளனர்.

ஆனால் பணம் பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com