பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93 அடியாக குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.96 அடியாக உள்ளது.அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93 அடியாக குறைந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2.47 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு இதுவரை திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் நேற்று முதல் காலிங்கராயன் பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.96 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 298 கன அடியாக குறைந்தது.

காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com