மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் சாவு

பழனி திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார்.உடனடியாக அவரை சிகிச்சைக்காக கார் மூலம் கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர்.
மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கரட்டுப் பாளையம் அருகே உள்ள மேட்டுக்காடு பவர் ஹவுஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி (39). விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்திய சாவித்திரி.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனியை கட்டு விரியன் பாம்பு கடித்து விட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பிறகு பழனி உடல் அடிக்கடி சரி இல்லாமல் இருந்தது.

இதற்காக பழனி கொடிவேரியில் உள்ள பாம்பு கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை பழனி திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கார் மூலம் கோபி அரசு மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com