முதியவர் மயங்கி விழுந்து சாவு

சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.டாக்டர் பரிசோதனை செய்து விட்டு சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
முதியவர் மயங்கி விழுந்து சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள விண்ணப்பள்ளி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி சுசீலா சுப்பிரமணியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com