கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு தண்ணீர்பந்தல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வசந்தம் நகரை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 1.20 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com