டீயில் எலி மருந்தை கலந்து குடித்து இளம்பெண் தற்கொலை

சித்தோடு அருகே வயிற்று வலி குணமாகவில்லை என கூறி வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் டீயில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டீயில் எலி மருந்தை கலந்து குடித்து இளம்பெண் தற்கொலை
Published on

சித்தோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சக்தி மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று டீயில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com