தூய்மைப்பணியாளர் வாய்க்காலில் மூழ்கி சாவு

கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.
தூய்மைப்பணியாளர் வாய்க்காலில் மூழ்கி சாவு
Published on

ஈரோடு:

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). நகராட்சி தூய்மைப்பணியாளர். இவரது மனைவி மல்லிகா (49). இருவரும் கடந்த 25-ந் தேதி சொந்த ஊரானா ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுவண்டிபாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.

பின்னர் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மல்லிகா தன் கணவரை தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com