சாலையோரம் உள்ள கழிவு நீர் வடிகாலில் விழுந்த எருமை மாடு மீட்பு

அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு தவறி கழிவுநீர் வடிகாலில் விழுந்து விட்டது.இதனை மீட்க முடியாமல் எருமை மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சாலையோரம் உள்ள கழிவு நீர் வடிகாலில் விழுந்த எருமை மாடு மீட்பு
Published on

அந்தியூர்:

அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் எப்பொழுதும் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி குளம் போல இருக்கும்.

இந்நிலையில் இன்று காலை அந்த வடிகாலில் அருகே எருமை மாடு, நிறைமாதம் கர்ப்பம் தரித்த கன்றும் சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எருமை மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்து விட்டது.

இதனை மீட்க முடியாமல் எருமை மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி எருமை மாட்டை உயிருடன் மீட்டனர். இதனால் அந்தியூர்-பர்கூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com