பவானிசாகர் அணையில் இருந்து 1,250 கன அடி நீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து 1,250 கன அடி நீர் வெளியேற்றம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து அணை யின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து மழைப் பொழிவு இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று 104.95 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் இன்று சற்று குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.87 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 250 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி என மொத்தம் 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனையடுத்து பொதுப்பணித் துறையினர் உஷார் படுத்தப் பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com