பெண் போலீசின் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமாருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.மன வேதனை அடைந்து வந்தார். இந்த நிலையில் சசிகுமார் வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார்.
பெண் போலீசின் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

அரச்சலூர்:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் போலீஸ் நிலை யத்தில் மாலதி என்பவர் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சசிகுமார் (வயது 42). இவர்கள் போலீஸ் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வரு கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமாருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.

ஆனால் அவருக்கு தோள்பட்டையில் அடிபட்ட காரணத்தால் தொடர்ந்து கை வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கை வலி தாங்க முடியாமல் சசிகுமார் மன வேதனை அடைந்து வந்தார்.

இந்த நிலையில் சசிகுமார் வீட்டில் மின்விசிறியால் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com