கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாயாத்தாளை காணவில்லை.ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
Published on

ஈரோடு:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள செஞ்சேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (68). இவரது மனைவி தாயாத்தாள் (65). இவருக்கு கடந்த சில வருடமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டி ருந்த தாயாத்தாளை காணவில்லை. அவரை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கணவர் பழனிசாமி தேடி வந்துள்ளார்.

இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட வேலப்பகவுண்டன் வலசு, செம்பாளி தோட்டம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து மூதாட்டி உடல் ஒன்று மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று உடலை பார்த்தபோது அது தனது மனைவி தாயாத்தாள் தான் என்பது தெரியவந்தது.

நோய் கொடுமையால் மனமுடைந்த தாயாத்தாள் ஈரோடுக்கு வந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com