ரெயில் மோதி முதியவர் பலி

ஆண் பிணமாக கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அந்த வழியாக வந்த ரெயில் மோதி அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது.
ரெயில் மோதி முதியவர் பலி
Published on

ஈரோடு, 

ஈரோடு அடுத்த காவிரி ரெயில் நிலையம்- ஆனங்கூர் ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடந்த போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது. இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com