ரெயில் மோதி முதியவர் பலி

முதியவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை.
ரெயில் மோதி முதியவர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்திற்கும், வீரபாண்டி ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை யில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவ ளத்தை கடந்த போது ரெயில் மோதி அந்த முதியவர் இறந்தது தெரிய வந்தது. இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. முதியவர் முகம் மற்றும் உடல் சிதைந்துள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com