விஷ மாத்திரை தின்று முதியவர் சாவு

அருள்மொழிஅரசு விஷமாத்திரையை தின்று உயிருக்கு போராடினார்.அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷ மாத்திரை தின்று முதியவர் சாவு
Published on

ஈரோடு:

மொடக்குறிச்சி அடுத்துள்ள அவல்பூந்துறையை சேர்ந்தவர் அருள்மொழிஅரசு (57). இவர் சித்த மருத்துவம் பார்த்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரையை தின்று சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த அருள்மொழிஅரசு தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் விஷமாத்திரையை தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழி அரசு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com