தூக்கு போட்டு முதியவர் தற்கொலை

அறுவை சிகிச்சை செய்ய பெரியசாமிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. செட்டின் விட்டதில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பெரிய வெட்டுவபாளையம், தலைகரைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (82). தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பெரியசாமிக்கு 2 கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்ய பெரியசாமிக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இதனால் தான் அடிக்கடி சாவதே மேல் என்று அவர் கூறி வந்துள்ளார்.

உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.இந்நிலையில் நேற்று பெரியசாமி வீட்டில் உள்ளவர்கள் சென்னிமலை சென்று விட்டனர். பெரியசாமி மட்டும் வீட்டில் இருந்து உள்ளார். அப்போது தற்கொலை செய்ய முடிவு எடுத்த பெரியசாமி மாடு கட்டும் நைலான் கயிற்றால் வெளியில் உள்ள செட்டின் விட்டதில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பெரியசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com