முதியவர் விஷம் குடித்து தற்கொலை

குமாரசாமி கவுண்டர் பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் குமார சாமி கவுண்டர் (வயது 66). இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் கை, கால் மற்றும் வயிற்றில் அடிப்பட்டது. அதை தொட ர்ந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் மீண்டும் கை, கால் மற்றும் வயிற்று வலி இருந்ததால் மன வேதனை அடைந்த குமாரசாமி கவுண்டர் தோட்ட த்திற்கு வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

பின்னர் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக புளியம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் குமாரசாமி கவு ண்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து குமாரசாமி கவுண்டரின் மகன் சக்திவேல் முருகன் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com