மது விற்ற மூதாட்டி கைது

கண்ணம்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது விற்ற மூதாட்டி கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பசுவனபுரம் கரலியம் ரோடு அருகே மது விற்பனை நடைபெறுவதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சிறப்புப் இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா மற்றும் போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி கண்ணம்மா (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com