மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.இது குறித்து புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
Published on

அம்மாபேட்டை:

அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (72). இவரது மகன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த சின்னம்மாள் கடந்த 23-ந் தேதி அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி குள்ளனூரில் வசிக்கும் தனது மகள் ஜோதிலட்சுமி வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது இறந்த தனது மகன் பழனிச்சாமி நினைப்பாகவே உள்ளதாக தனது மகளிடம் கூறி வருத்தப்பட்டிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமி தாய்க்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சின்னம்மாள் கோவிலூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லாமல் இருந்தது ஜோதிலட்சுமிக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து ஜோதிலட்சுமி சின்னம்மாளை தேடி வந்த நிலையில் பூதப்பாடி அருகே உள்ள வாய்க்கால் கரையில் சின்னம்மாள் மாத்திரை சாப்பிட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன் நேரில் சென்று பார்த்த போது மாத்திரை சாப்பிட்டு கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com