கூலி தொழிலாளி பலி

பழனிச்சாமி சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பவானி நோக்கி வந்து கொண்டிருந்தார்.ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்
கூலி தொழிலாளி பலி
Published on

பவானி

பவானி அருகில் உள்ள கருவாச்சி அம்மன் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (62). விவசாய கூலி தொழிலாளி ஆவார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பவானி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பவானி சக்தி மெயின் ரோட்டில் வந்தபோது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பழனிச்சாமி தூக்கி வீசப்ப ட்டு பலத்த காயமடைந்தார். காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

இறந்த பழனிச்சாமி உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனு ப்பப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி, ஜம்பை, பாரதி நகர் பகுதி யில் வசிக்கும் ஆனந்தகுமார் (35) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com