கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 593 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 593 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

பவானிசாகர் அணையில் இருந்து நேற்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1,700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.59 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.82 அடியாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com