சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

கண்டிக்காட்டு வலசு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
Published on

ஈரோடு:

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அருகே உள்ள கண்டிக்காட்டு வலசு பகுதியில் உள்ள முள்காடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக அறச்சலூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள பெரியமணியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (72) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரத்து 210 மதிப்பிலான 17 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com