மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவர் தற்கொலை

அறையில் அருளானந்தம் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள மாயபுரம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (45). இவர் அப்பகுதியில் உள்ள டையிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அருளானந்தத்தின் மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து அருளானந்தம் தனது குழந்தைகள் மற்றும் தாய் தெரசாமேரி (68), தம்பி ஜெயசீலன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட அருளானந்ததுக்கு அவரது தாய், தம்பி மற்றும் குழந்தைகள் அனைவரும் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை அருளானந்தத்தின் மகன் கண் விழித்து பார்த்த போது வீட்டினுள் உள்ள அறையில் அருளானந்தம் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருளானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com