மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் செல்வராஜுக்கு தலை, மார்பு, தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டது.சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (54). இவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த சத்யா என்பவரது தோட்டத்தில் சம்பவத்தன்று மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் செல்வராஜுக்கு தலை, மார்பு, தோள்பட்டைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com