வியாழக்கிழமை தோறும் நிலக்கடலை ஏலம்

முதல் நிலக்கடலை மறைமுக ஏலம் விற்பனை நடக்க உள்ளது.தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலமும் நடக்கிறது.
வியாழக்கிழமை தோறும் நிலக்கடலை ஏலம்
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள் மறைமுக ஏலமும், கூடுதலாக தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலமும் நடக்கிறது. வரும் வியாழக்கிழமை முதல் நிலக்கடலை மறைமுக ஏலம் விற்பனை நடக்க உள்ளது.

இதற்காக புதன் கிழமை மாலை, 4 மணிக்குள் நிலக்கடலையையும், சனிக்கிழமை காலை, 8 மணிக்குள் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காயை எடுத்து வர வேண்டும்.

விளை பொருட்களை கல், மண், தூசு நீக்கம் செய்து, தரம் பிரித்து விற்பனை கூடத்துக்கு கொண்டு வர வேண்டும். வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளை பொருளுக்கான தொகையை நேரடியாக விவசாயி வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

எனவே, விவசாயிகள், தங்களது வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு ஈரோடு மாவட்ட விற்பனைக்குழு – 99445 23556, மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை, 99425 06990 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com