கவுந்தப்பாடியில் வீடு இடிந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்

கவுந்தப்பாடி- சக்தி ரோடு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள திரு.வி.க.வீதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததுவீட்டில் குடியிருந்த மாது மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் என்ன மொத்தம் 4 பேர் உயிர் தப்பினர்
கவுந்தப்பாடியில் வீடு இடிந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

அதனை தொடர்ந்து நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூர் பகுதிகளில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் குண்டேரிபள்ளம், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடிவேரி, கவுந்தப்பாடி, பவானி, தாளவாடி, ஈரோடு, பவானிசாகர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

கவுந்தப்பாடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு கவுந்தப்பாடி- சக்தி ரோடு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள திரு.வி.க.வீதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் குடியிருந்த மாது மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் என்ன மொத்தம் 4 பேர் உயிர் தப்பினர்.

இந்நிலையில் இன்று காலை முதலே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியில் காலை 8 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். மாணவ -மாணவிகள் குடைப்பிடித்தபடி பள்ளிக்கு சென்றனர்.

இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com