2 இடங்களில் தீ விபத்து

வறண்டு கிடந்த புற்களில் திடீரென தீ பிடித்தது.சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அடைத்தனர்.
உலகபுரம் பகுதியில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர் அணைத்த காட்சி.
உலகபுரம் பகுதியில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர் அணைத்த காட்சி.
Published on

சென்னிமலை:

சென்னிமலை அருகே உலகபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வறண்டு கிடந்த புற்களில் திடீரென தீ பிடித்தது.

இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதேபோல் சென்னிமலை அருகே பழைய பாளையம் பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அடைத்தனர்.

பீடி, சிகரெட் பற்ற வைத்தவர்கள் தீயை அணைக்காமல் போட்டதால் தீ விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com