மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனார்

ராமசாமி அரிவாளால் ஜோதிலட்சுமியை திடீரென வெட்டினார்.சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

சென்னிமலை:

சென்னிமலை மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி ஜோதிலட்சுமி (வயது 43). நாச்சிமுத்துவின் தந்தை ராமசாமி சென்னிமலை அடுத்த மேலப்பாளையத்தில் சரவணா நகரில் வசித்து வருகிறார்.

இவர் தனது பூர்வீக நிலத்தை விற்று அதில் 3 மகன்களுக்கும் வீடு கட்டி தந்துள்ளார்.

இந்த நிலையில் ராமசாமி மணிமலை கரடு பகுதியில் உள்ள தனது மகன் குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஜோதிலட்சுமியிடம், ராமசாமி செய்வினை வைத்து விட்டாய். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ராமசாமி தான் வைத்திருந்த தேங்காய் போடும் அரிவாளால் ஜோதிலட்சுமியை திடீரென வெட்டினார். இதில் ஜோதிலட்சுமி படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

இதை கண்ட அவரது மகன்கள் ராமசாமியை தடுக்க சென்றனர். பின்னர் அவர் தன்னை தடுத்தால் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் ராமசாமி அரிவாளை போட்டு விட்டு அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமவைாக உள்ள ராமசாமியை போலீசார் வலை வீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com