மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.அப்போது அவர் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (61). விவசாய கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

இதையடுத்து அவர் கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவர் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மகுடேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com