தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது.சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
Published on

தாளவாடி:

தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (40) இவர் தனது 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

நேற்று இரவு வனப்பகுதியில்11 மணி அளவில் வந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழையை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தன. இதைப் பார்த்த விவசாயி ஜீவாநந்தம் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். விவசாயிகள் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டும் யானைகளை துரத்தினர்.

ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் வாழையை தொடர்ந்து சேதபடுத்தியது. அதிகாலையில் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

இதில் யானைகளால் 150 வாழைகள் சேதமடைந்தது. சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com