முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனி 6-வது வீதியை சேர்ந்தவர் பொன்னரசு (60). இவா் கடந்த 10 ஆண்டுகளாக மன சோர்வு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொன்னரசு சம்பவத்தன்று சல்பாஸ் மாத்திரையை (விஷ மாத்திரையை) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பொன்னரசை மீட்டு சிகிச்சைக்காக கருங்கல்பா–ளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை–யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com