10 மோட்டார் சைக்கிள்கள் ஆயுதப்படைக்கு அனுப்பி வைப்பு

அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்கள் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஈரோடு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு பத்து வாகனங்கள் காவல்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டது.
10 மோட்டார் சைக்கிள்கள் ஆயுதப்படைக்கு அனுப்பி வைப்பு
Published on

அந்தியூர்:

அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டஅந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணா மடுவு, பச்சாபாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பி பாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கேட்பாரற்று இருந்த இருசக்கர வாகனங்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி அந்த வாகனங்கள்பற்றி விபரம் தெரியாததாலும் வாகனங்களைத் தேடி யாரும் உரிமை கோரி வராததாலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு பத்து வாகனங்கள் காவல்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com