தேங்காய் ஏலம்

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.மொத்தம் தேங்காய்கள் 38,784 ரூபாய்க்கு விற்பனையானது.
தேங்காய் ஏலம்
Published on

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த விவசாயிகள் 3,700 தேங்காயை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் ஒரு காசுக்கும், அதிகபட்சமாக 25 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கு ஏலம் போனது. மொத்தம் 1, 655 கிலோ எடை உள்ள தேங்காய்கள் 38,784 ரூபாய்க்கு விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com