துப்புரவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

வீட்டில் சிவக்குமார் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
துப்புரவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்த பெரிய வேட்டுவபாளையம், அரிஜுன காலனி பகுதியை ேசர்ந்த சிவக்குமார் (வயது 26). இவர் பெருந்துறை பஞ்சாயத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி அகல்யா என்ற மனைவியும், கோபிகாஸ்ரீ என்ற மகளும், ஸ்ரீவர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சிவக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டு அகல்யா குழந்தைகளுடன் அவரது அம்மாவிடான ஈரோடு கொல்லம்பாளையத்திற்கு சென்று விட்டார். அதில் இருந்து சிவக்குமார் சரியாக வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் சிவக்குமார் தந்தையும், தாயும் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினர். எனினும் சிவக்குமார் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்.

மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிவக்குமார் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது தந்தை மாலை கடைக்கு சென்றார். பின்னர் கடையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிவக்குமார் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரது தந்தை சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை கீழே இறக்ககினர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவக்குமார் இறந்து விட்டதாக கூறினர்.

இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com