இரவுநேர ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்கு

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

ஈரோடு, 19:

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இரவு ஊரடங்கையொட்டி மாவட்டம் 1,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதேப்போல் 14சோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டது.  

ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

எனினும் நேற்று இரவு ஊரடங்கு மீறி பலர் தேவையின்றி சுற்றித்திரிந்ததை காண முடிந்தது. சிலர் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றி வந்தனர். 

சிலர் முககவசம் அணியாமல் வந்தனர். நேற்று ஒரே நாளில் ஈரோடு மாநகர் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேப்போல் முக கவசம் அணியாமல் சென்ற நூற்றுக்கணக் கானவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com