போதை பொருட்கள் விற்ற பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு

போதை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதை பொருட்கள் விற்ற பெண் உட்பட 4 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மொடக்குறிச்சி, பவானி, காஞ்சிகோவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாமிநாதபுரம், நஞ்சை ஊத்துக்குளி, கருக்கம்பாளையம், பவானி புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொடக்கு றிச்சி சாமிநாதபுரம் கரட்டங்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜர் (வயது 32), நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமி மகன் முருகேசன் (57), பெத்தம்பாளையம் அடுத்த கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நல்ல கவுண்டர் மகன் லோகநாதன் (26), பவானி காமராஜர் நகர் பெருமாள்புரம் சுரமணி மனைவி மலர்விழி (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com