லாட்டரி விற்ற 14 பேர் மீது வழக்கு

லாட்டரி சீட்டுகள், செல்போன்கள் மற்றும் ரூ.31 ஆயிரத்து 850 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி விற்ற 14 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அம்மாபேட்டை, ஈரோடு தெற்கு, பவானி, கடத்தூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஈரோடு-சென்னிமலை ரோடு, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டி ருந்த பவானி நந்தனார் தெருவை சேர்ந்த மாதே ஸ்வரன் மகன் வசந்த் என்ற வசந்தகுமார்,

எம்.ஜி.நாத் என்ற மதியன், பி.கே.புதுரை சேர்ந்த சரவணன், பெரியார் நகர் தமிழரசன், பவானி கார்த்திக், நாமக்கல் மாவ ட்டம் பள்ளிபா ளையத்தை சேர்ந்த மனோகரன் மகன் புகழேந்தி (வயது 28),

அதே பகுதியை சேர்ந்த பாலசு ப்பிரமணியம் மகன் ரஞ்சித் (23), சூரம்பட்டி காமராஜர் தெரு பரஞ்சோதி மகன் ராமச்சந்திரன் (52), சீனி வாசன், பவானி பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் கணேசன் (57) மற்றும் இவரது மனைவி தனவள்ளி,

சத்தியமங்கலம் ரெங்க சமுத்திரம் மணி மகன் ரமேஷ் என்ற குப்புசாமி (40), கோபி காசிபாளையம் வெங்கடசாமி மகன் செல்வன் (51), சக்தி கோ ல்டன் ஜோசப் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போ ன்கள் மற்றும் 31 ஆயிரத்து 850 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com