பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உயர்வு

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளது.அணையில் இருந்து மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,492 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com