பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை

பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை
Published on

பவானி:

ஈரோடு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்து நடந்து வருகிறது.

இதையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதை தொடர்ந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின்போது வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் கயிறு கள் பயன்படுத்தி எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், நீரில் மூழ்கி மயக்க நிலை அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com