சண்டையை விலக்க சென்ற வாலிபர் மீது தாக்குதல்

சித்தோட்டில் சண்டையை விலக்க சென்ற வாலிபர் தாக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மற்றொரு வாலிபரை கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சித்தோடு:

சித்தோட்டில் சண்டையை விலக்க சென்ற வாலிபர் தாக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மற்றொரு வாலிபரை கைது செய்தனர்.

பவானி அருகே உள்ள சித்தோடு பேரோடு, ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. காஞ்சிக்கோவில் வெள்ளையன்காடு புதுகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (28). இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர்.

இவர்கள் தாக்கி கொண்டதை கண்ட ராஜாவின் வீட்டின் அருகே குடியிருக்கும்  பெரியசாமி (32) என்பவர் இருவரையும் சமாதானம் செய்து சண்டையை தடுக்க முயற்சிசெய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அருகே இருந்த செங்கலை எடுத்து பெரியசாமியை  தாக்கினார். இதில் அவருக்கு தலை, முகம், மூக்கு உள்பட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் அவரது பல் உடைந்தது. அதேபோல் சேகருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் பெரிய சாமியை மீட்டு ஈரோடு அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி.  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை  கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com