ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

ஈரோடு:

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ண ப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பங்களை வரும் 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளி யிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

விண்ணப்பங்கள் ஈரோடு கல்வி மாவட்டம் - deoerode2016@gmail.com, பவானி கல்வி மாவட்டம் - deobhavani6@gmail.com, கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் - deogobi@gmail.com, பெருந்துறை கல்வி மாவட்டம்-deoperundurai@gmail.com, சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்-deosathy@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com