பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று காலை ஆனி திருமஞ்சன விழா நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் சிவகாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் சிவகாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவி லில் இன்று காலை ஆனி திருமஞ்சன விழா நடந்தது. இதையொட்டி சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜ பெருமானுக்கு காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதை தொடர்ந்து நடரா ஜருக்கு மகா ஹோமம் நடத்தப்பட்டது. இதை யடுத்து 108 சங்காபிஷேகம் நடந்தது. மேலும் பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அல ங்காரத்தில் சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜர் அருள் பாலித்தனர். தொட ர்ந்து தீபாராதனை காட்ட ப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் பாரியூர் அமர பணீஸ்வரர், ஈஸ்வரன் கோவில் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் இன்று காலை ஆனி திரு மஞ்சன விழா நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com