கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை

மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு பி.பி.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் அப்துல்பாரூக் (68). இவரது மனைவி ஆயிஷா. அப்துல் பாரூக்கு நீண்ட வருடமாக இருதய நோய் பிரச்சனை இருந்து வந்தது.

இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த பாரூக் சம்பத்தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்து பி.பி.அக்ரஹாரம் காயிதே மில்லத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரூக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com