பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

மாணவி வாலிபர் ஒருவருடன் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்து விஜயமங்கலம் பகுதியில் 17 வயது மாணவி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பள்ளிக்கு சென்ற அந்த மாணவி வீடு திரும்பவி ல்லை.

இதனால் மாணவியின் பெற்றோர் பல இடங்களிலும் அவரைத் தேடிப்பார்த்தனர் .

அவர்களால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார்.

இந்த நிலையில் அந்த மாணவி வாலிபர் ஒருவருடன் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து பெருந்துறை போலீசார் விரைந்து சென்று பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவி மற்றும் அவருடன் இருந்த வாலிபரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள உதயத்துறையை சேர்ந்த ரங்கநாதன் (வயது 26) என்றும், பெயிண்டரான இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த மாணவியிடம் பழகியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் அந்த மாணவிக்கு காதல் வலை வீசி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 5-ந் தேதி பெருந்துறை பகுதிக்கு வந்த அந்த மாணவியை கடத்திச் சென்று கெங்க வல்லி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரங்கநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

மேலும் மருத்துவ பரிசோத னைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ரங்கநாதன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com