பிராந்தி பாட்டிலால் பெயிண்டர் மண்டையை உடைத்த வாலிபர்

சண்முகத்திடம், பிரபுகுமார் 100 ரூபாய் எனக்கு கடனாக கொடு என கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.கடன் கொடுக்க வக்கில்லாத உனக்கு என்னடா மரியாதை எனக் கூறி அருகில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து தலையில் அடித்ததில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பிராந்தி பாட்டிலால் பெயிண்டர் மண்டையை உடைத்த வாலிபர்
Published on

நம்பியூர்:

நம்பியூர் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இதில் சம்பவத்தன்று மதியம் 2 மணி அளவில் சந்தனநகர் பகுதியை சேர்ந்த குமார் என்கிற சண்முகம் (45). பெயிண்டர். அவரது நண்பர் பிலியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபுகுமார் (27) ரிக் வண்டி தொழிலாளி. இருவரும் மது குடிக்க சென்றுள்ளனர்.

அப்போது சண்முகத்திடம், பிரபுகுமார் 100 ரூபாய் எனக்கு கடனாக கொடு என கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அதற்கு பிரபுகுமார் பணத்தை வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்கிறாயா என தகாத வார்த்தையில் பேசி யுள்ளார்.

100 ரூபாய் கூட கடன் கொடுக்க வக்கில்லாத உனக்கு என்னடா மரியாதை எனக் கூறி அருகில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து தலையில் அடித்ததில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சண்முகம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கியதில் பிரபுகுமாருக்கு வாயின் கீழ் உதடு, வலது கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடை ந்த சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com