நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் வாலிபர் பலி

நாய் ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே வந்து சதீஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.
நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் வாலிபர் பலி
Published on

சென்னிமலை:

காங்கேயம், கோவை ரோடு, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (22). இவர் சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் ரோட்டில் உள்ள பசுவபட்டி பிரிவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரோட்டோரம் இருந்த நாய் ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே வந்து இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறிய சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com